ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய அரசுக்கு பரிந்துரை செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பாக மாணவர்கள் நலன் கருதி பரிந்துரை செய்யப்படும் என்றும் விசாரணை ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார். #Jallikattu
கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது. அப்போது வன்முறை ஏற்பட்டதில் மாணவர்கள் மீது தாக்குதல், காருக்கு தீ வைத்தது போன்றவை நடந்தது.
இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இவர், இன்று இறுதிக்கட்ட விசாரணையை மதுரையில் தொடங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தினை போராட்ட களத்தில் வைத்து இருந்தது தெரியவந்தது. பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்கள் கூட விசாரணைக்கு வர மறுத்து விசாரணைக்கு வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #Jallikattu #JallikattuProtest