செய்திகள்

சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி வைக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்கும்- எல்.கே. சுதிஷ் பேச்சு

Published On 2019-01-16 10:17 GMT   |   Update On 2019-01-16 10:17 GMT
வருகிற பாராளுமன்ற , சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும் என்று எல்கே சுதிஷ் பேசினார். #lksudhish #dmdk #vijayakanth #parliamentelection

வடவள்ளி:

கோவை மாநகர் மேற்கு மாவட்டம் சாய்பாபா காலனி பகுதி தே.மு.தி.க. சார்பில் பொங்கல் பொருள் பரிசளிப்பு விழா தடாகம் ரோடு வேலாண்டி பாளையம் ஆனந்த ஹவுசிங் காலனி 13-வது வார்டில் நடைப்பெற்றது. விழாவில் பொதுமக்கள் 4100 பேருக்கு 15 லட்சம் செலவில் பொங்கல் பொருள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தே.மு.தி.க. மாநில துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்கி பேசியதாவது:-

வெளிநாட்டிற்கு சிகிச்சை பெற விஜயகாந்த் சென்றாலும் தமிழ் மக்களின் நலனை எந்நேரமும் விசாரித்தபடி உள்ளார். விஜயகாந்தை விமர்சித்து மீம்ஸ் போட்டவர்கள் எல்லாம் தற்போது அவரை சிறந்த தலைவர் என ஒத்துக்கொண்டு உள்ளனர்.

ஊழல் இல்லாத தலைவன் விஜயகாந்த் மட்டுமே. வரும் மார்ச் மாதம் திருப்பூரில் நடக்கும் மாநாட்டில் அவர் வந்து பேசுவார்.


வருகிற பாராளுமன்ற , சட்ட மன்ற தேர்தலாக இருந்தாலும் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும் .

வேலூரில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணி நடைப்பெறுகிறது. இதனால் 13 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கும் . கஜா புயலால் 6 மாவட்டங்கள் பாதிப்பு அடைந்து உள்ளன. மாநிலத்தில் 20- க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிப்பு அடைந்து உள்ளது.

விவசாயிகள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆகியோருக்கு அடுத்து நாம் ஆட்சிக்கு வரமுடியாது என்பது தெரிந்து விட்டது.


அ.தி.மு.க.- தி.மு.க. கட்சிகள் மக்களால் தூக்கி எறியப்படும். வருகின்ற தேர்தலில் தே.மு.தி.க. அதிக இடங்களில் போட்டியிடும் .

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவுக்கு சாய்பாபா காலனி பகுதி செயலாளர் சிவராமன் தலைமை தாங்கினார். மாநகர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.முருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைச்செயலாளர்கள் பார்த்தசாரதி , அக்பர் , கோவை மாவட்ட செயலாளர்கள் காட்டன் செந்தில், தினகரன் , தியாகராஜன், மாநில கலை இலக்கிய அணி துணைச்செயலாளர் சிங்கை சந்துரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் வார்டு செயலாளர் தவசிமுருகன், பகுதி இளைஞரணி சதிஷ் குமார் , வார்டு இளைஞரணி சக்தி , 14 - வது வட்ட செயலாளர் ராஜா , பகுதி துணைச்செயலாளர் திருநாவுக்கரசு , பகுதி பிரதிநிதி கருப்பையா , சிவபாலன் , கோவிந்தன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #lksudhish #dmdk #vijayakanth #parliamentelection

Tags:    

Similar News