செய்திகள்

பல்லடத்தில் கணவன், மனைவி தற்கொலை - ஒரே சேலையில் தூக்கில் தொங்கினர்

Published On 2019-01-08 15:59 IST   |   Update On 2019-01-08 15:59:00 IST
பல்லடத்தில் ஒரே சேலையில் கணவன் -மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன்(32). இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.

இந்த நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் முத்து கிருஷ்ணன் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர்.

அப்போது வீட்டில் உள்ள அறையில் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் முத்து கிருஷ்ணனும், லாவண்யாவும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கதவை உடைத்து உ ள்ளே சென்று தூக்கில் பிணமாக தொங்கிய கணவன்-மனைவி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News