செய்திகள்

தேர்தல் கமி‌ஷன் நாடகம் அம்பலம் - தினகரன் குற்றச்சாட்டு

Published On 2019-01-07 07:24 GMT   |   Update On 2019-01-07 07:30 GMT
தேர்தல் ஆணையம் கருத்து கேட்பு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளதற்கு டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #ElectionCommission #TTVDinakaran
சென்னை:

அ.ம.மு.க. கட்சி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-

தேர்தல் அறிவிக்கை வெளியிட்டு தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு கருத்து கேட்பு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். இது ஜனநாயக நடை முறைகளை கேலிக்கூத் தாக்குவதாகும்.

இந்த ஜனநாயக விரோத செயலை ஆளும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக செய்ய முயன்றபோதே கண்டித்திருக்க வேண்டிய தி.மு.க.வும் இதற்கு துணைபோனது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க.வுக்கும் தோல்வி பயம் இருந்ததையே இது காட்டியது.



திருவாரூரில் அ.ம.மு.க. வெற்றிபெறும் என்ற கள யதார்த்தத்தை உணர்ந்தே இந்த வி‌ஷயத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கைகோர்த்துள்ளன. இதற்கு சரியான தண்டனையை எப்போது தேர்தல் வந்தாலும் இந்த 2 கட்சிகளுக்கும் வழங்க திருவாரூர் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #ElectionCommission #TTVDinakaran
Tags:    

Similar News