செய்திகள்

ஆவடி அருகே வீட்டுக்குள் புகுந்து மாணவனை குத்தி கொல்ல முயற்சி

Published On 2018-12-28 15:12 IST   |   Update On 2018-12-28 15:12:00 IST
ஆவடி அருகே வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் மாணவனை குத்தி கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர்:

ஆவடியை அடுத்த அயப்பாக்கம் தேவி நகரை சேர்ந்தவர் வேணு. கூலி தொழிலாளி. இவரது மகன் பாபு(14). அம்பத்தூர் அத்திப்பட்டில் உள்ள அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் வீட்டின் மொட்டை மாடியில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல் பாபுவை கத்தியால் சரமாரியாக குத்தினர். வயிறு, முதுகு, முகம் என 10-க்கும் மேற்பட்ட இடத்தில் அவருக்கு கத்தி குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்ததும் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாபுவை மீட்டு மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

பள்ளியில் சக மாணவர்களுடன் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி நடந்ததா? என்பது குறித்து திருமுல்லைவாயில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News