செய்திகள்

பள்ளி தாளாளரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும்- போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-12-08 16:09 IST   |   Update On 2018-12-08 16:09:00 IST
பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்து, வருகிற திங்கட்கிழமை கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #tamilnews
சென்னை:

காஞ்சீபுரம் மாவட்டம், வந்தவாசியில் ஆர்.சி.எம். பள்ளிக்கூடத்தில் தாளாளருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி, பள்ளி தாளாளருக்கு கடந்த மாதம் ஐகோர்ட்டு சம்மன் அனுப்பியது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.வி. முரளிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி தாளாளர் ஆஜராகவில்லை.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தார். மேலும், பள்ளிதாளாளரை வந்தவாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்து, வருகிற திங்கட்கிழமை கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். #tamilnews
Tags:    

Similar News