செய்திகள்

ராகுல் திடீர் அழைப்பு: இளங்கோவன் டெல்லி பயணம்

Published On 2018-12-06 09:06 GMT   |   Update On 2018-12-06 09:06 GMT
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இருந்து திடீர் அழைப்பு வந்ததால் இளங்கோவன் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். #Congress #Elangovan
சென்னை:

தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் உச்சக் கட்டத்தில் உள்ளது. எனவே கட்சி பதவிகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக பேசப்படுகிறது.

அனைத்து கோஷ்டி தலைவர்களும் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் தங்கள் கோரிக்கையை வைத்தனர். புதிய தலைவர் நியமிக்கப்படலாம் அல்லது செயல் தலைவர், ஒருங்கிணைப்பாளர்கள் என்று புதிய நிர்வாக அமைப்பு உருவாக்கப்படலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் மாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை.

5 மாநில சட்டசபை தேர்தல் நடந்ததால் ராகுல் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் அதில் கவனம் செலுத்தி வந்தனர். கட்சி பணிகளை கவனிக்க நேரம் இல்லை. தற்போது 5 மாநில தேர்தல் பிரசாரம் முடிந்து விட்டது. ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி திரும்பி விட்டனர்.

இன்று முதல் மாநில கட்சி விவகாரங்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு, ராகுல் காந்தியிடம் இருந்து திடீர் அழைப்பு வந்தது.

இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு இளங்கோவன் டெல்லி புறப்பட்டு சென்றார். எனவே அவருக்கு தமிழக காங்கிரசில் முக்கிய பொறுப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Congress #Elangovan
Tags:    

Similar News