செய்திகள்
காதலித்துவிட்டு பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
ஊத்துக்கோட்டை அருகே காதலித்துவிட்டு பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள அல்லிகுழி கிராமம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் பூபாலன். அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவர் அதே கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். இந்த நிலையில் காதல் விவகாரம் தெரிந்ததும் பூபாலனின் பெற்றோர் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து பூபாலன் கடந்த 2 மாதங்களாக காதலியை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.
இதுபற்றி பூபாலனிடம் கேட்டபோது இளம்பெண்ணை தாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இளம்பெண் ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அனுராதா வாலிபர் பூபாலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை புழல் சிறையில் அடைத்தனர்.