செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.10.50 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்- 4 பயணிகள் சிக்கினர்

Published On 2018-12-02 15:00 GMT   |   Update On 2018-12-02 15:00 GMT
திருச்சி விமான நிலையத்தில் ரூ.10.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தி வந்த 4 பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #trichyairport #goldseized

கே.கே.நகர்:

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு மலேசியா மற்றும் துபாயில் இருந்து விமானங்கள் வந்தன. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது திருவாரூரை சேர்ந்த அகமதுகான், புதுக்கோட்டையை சேர்ந்த அடைக்கலம், குலசேகர பட்டினத்தை சேர்ந்த அப்துல்காதர் மற்றும் ஒருவர் ஆகியோரின் உடைமைகளை சோதனை செய்த போது அவர்கள் ரூ.10.50 லட்சம் மதிப்புள்ள 345 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையம் வழியாக கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சோதனை பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். #trichyairport #goldseized

Tags:    

Similar News