செய்திகள்

பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை -டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை

Published On 2018-11-26 11:38 GMT   |   Update On 2018-11-26 11:38 GMT
பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாக டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. #cellphoneusebanned #dgpoffice
சென்னை

சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணி  மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு  பணியில் இருக்கும்போது,  காவலர்கள்  செல்போனை பயன்படுத்துவதால் பணியில் கவனக்குறைவு ஏற்படுகிறது.  அதுப்போல் காவலர்கள் அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது.  வாட்ஸ் ஆப்பில் அதிக நேரத்தை காவலர்கள் செலவழிப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், டிஜிபி அலுவலகம் ஒவ்வொரு  காவலருக்கும்  சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கபட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பணிநிமித்தமாக செல்போன் பயன்படுத்தலாம் என கூறப்பட்டு உள்ளது. #cellphoneusebanned #dgpoffice 
Tags:    

Similar News