செய்திகள்

தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் உள்பட 3 பேர் அனுமதி

Published On 2018-11-03 09:44 GMT   |   Update On 2018-11-03 09:44 GMT
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் உள்பட 3 பேர் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #DengueFever
தருமபுரி:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த சுந்தரம் பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

இதைத்தொடர்ந்து காய்ச்சலுக்காக சிகிச்சை பெற அவர் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவருக்கு காய்ச்சல் அதிகரிக்கவே டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டன. உடனே அவரை டெங்கு வார்டுக்கு மாற்றம் செய்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் (வயது 31) என்பவரும் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இவர் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்தபோது டெங்கு அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரையும் டெங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபோன்று தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சிவாடியைச் சேர்ந்தவர் மாது (54). இவர் காய்ச்சலால் அவதிப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்தபோது டெங்கு அறிகுறி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை டெங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News