செய்திகள்

வந்தவாசி அருகே வாலிபரை கொன்று வீசிய நண்பர்கள் கைது

Published On 2018-11-02 11:40 GMT   |   Update On 2018-11-02 11:40 GMT
வந்தவாசி அருகே வாலிபரை வெட்டி வீசிய நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வந்தவாசி:

வந்தவாசி அருகே உள்ள கடம்பை கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் கமல்ராஜ் (வயது 25). மும்முனி குளக்கரையில் கடந்த மாதம் 24-ந் தேதி காலில் வெட்டு காயத்துடன் கொலை செய்யபட்டு பிணமாக கிடந்தார்.

வந்தவாசி டி.எஸ்.பி பொற்செழியன் இன்ஸ்பெக்டர் கவுரி, சப்இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ், மகாலட்சுமி, ஏட்டுக்கள் முருகன், தட்சணாமூர்த்தி, ஏழுமலை ஆகியோர் கொண்ட தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ஐந்து கண் பாலம் அருகே சப்.இன்ஸ்பெக்டர் வரதராஜ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்.

அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் முறையான ஆவணம் காட்டாமல் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததால் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் இருவரும் ஓட்டி வந்த பைக் கொலையான கமல்ராஜிக்கு சொந்தமானது என தெரியவந்தது,

மேலும் அவர்கள் விளாநல்லூர் கிராமத்தைச்சேர்ந்த சாந்தவேல் (35) வந்தவாசி டவுன் கோட்டை பகுதியை சேர்ந்த சாமுவேல் (25) என தெரியவந்தது. பின்னர் இருவரும் கமல்ராஜை கொலை செய்து மும்முனி குளக்கரையில் வீசி சென்றதை ஒப்புக்கொண்டனர்.

அவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த மாதம் 21ந்தேதி 3 பேரும் கிருஷ்ணாவரம் கூட்டுசாலை அருகே அமர்ந்து மது குடித்தோம். அப்போது மதுவில் போதை பொருளை கலந்து சாந்தவேலுக்கு கொடுத்து அவர் மயங்கிய நிலையில் இருந்த போது அவரது பாகெட்டில் இருந்த ரூ.4 ,500 பணத்தை கமல்ராஜ் திருடி விட்டார்.

இதனை தொடர்ந்து கடந்த 24ந்தேதி நாங்கள் இருவரும் கமல்ராஜை மது அருந்த அழைத்தோம். ஆயிலவாடி கூட்டுசாலையில் வைத்து மது அருந்தினோம். பணத்தை திருடியது குறித்து கமல்ராஜிடம் கேட்டதற்கு அவர் மறுத்தார்.

இதனால் ஏற்பட்ட தகராறில் இருவரும் சேர்ந்து கமல்ராஜை காலில் மீன் வெட்டும் கத்தியால் வெட்டினோம். பின்னர் பைக்கில் கொண்டு வந்து மும்முனி குளக்கரையில் பொதுமக்கள் பார்க்கும்படி போட்டு சென்றால் காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்கள் என நினைத்து போட்டு சென்று விட்டோம். 

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

சாமுவேல், சாந்தவேல் இருவரையும் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News