செய்திகள்

பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து சரிவு

Published On 2018-10-30 09:02 GMT   |   Update On 2018-10-30 09:02 GMT
நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து சரிந்து வருகிறது. #MullaPeriyar #PeriyarDam
கூடலூர்:

தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக பெரியாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 142 அடி வரை எட்டியது. இதனால் திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

அதன்பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான அறிகுறி இன்னும் தென்படாததால் தொடர்ந்து நீர்வரத்து குறைந்துகொண்டே வந்தது.

இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.65 அடியாக உள்ளது. அணைக்கு 767 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து 2000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5551 மி.கன அடியாக உள்ளது.

71 அடி உயரம் உள்ள வைகை அணை நீர்மட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையின் நீர்மட்டம் 69 அடியிலேயே நிலை நிறுத்தப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. அதன்படி இன்று காலை அணைக்கு வந்த 2220 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 5571 மி. கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.35 அடியாக உள்ளது. வரத்து 44 கன அடி. திறப்பு 90 கன அடி.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.25 அடி. அணைக்கு வரும் 30 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.  #MullaPeriyar #PeriyarDam

Tags:    

Similar News