செய்திகள்

திருமுல்லைவாயலில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-10-28 03:01 IST   |   Update On 2018-10-28 03:01:00 IST
திருமுல்லைவாயலில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடி:

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் நாகம்மை நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் வின்சுலாஸ். இவருடைய தம்பி அடைக்கலத்தின் மகள் மோனிஷா ஜெனிபர்(வயது 22). பி.காம் படித்துள்ள இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இவருடைய தந்தை அடைக்கலம், உடல் நலம் சரியில்லாமல் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாய், வேறு ஒருவருடன் சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மோனிஷா ஜெனிபர், அவரது பெரியப்பா வின்சுலாஸ் வீட்டில் வசித்து வந்தார்.

தந்தை இறந்து விட்டதாலும், தாய் வேறு ஒருவருடன் சென்று விட்டதாலும் பாசத்துக்கு ஏங்கியபடி வாழ்ந்து வந்த மோனிஷா ஜெனிபர் மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்து கொண்ட மோனிஷா ஜெனிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். 
Tags:    

Similar News