ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் இருந்து வெளியேறியது ஹோம்பவுண்ட்
- இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- நீரஜ் கய்வான் இயக்கிய நிலையில், கரன் ஜோஹர் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் படத்தை தயாரித்திருந்தனர்.
வாஷிங்டன்:
திரையுலகில் சர்வதேச அளவில் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16-ம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவிலுள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும்.
இதற்கிடையே, நடப்பு ஆண்டில் 98-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் 24 பிரிவுகளில் வழங்கப்படும் விருதுக்கான இறுதி நாமினேஷன் பட்டியல் சமீபத்தில் வெளியானது.
இதில் இந்தியாவில் இருந்து 'ஹோம்பவுண்ட்' என்ற இந்தி படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பரிந்துரை பட்டியலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இப்படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் முன்னணி காதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நீரஜ் கய்வான் இயக்கிய நிலையில், கரன் ஜோஹர் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் படத்தை தயாரித்திருந்தனர்.
இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் இருந்து ஹோம்பவுண்ட் திரைப்படம் வெளியேறியது.