செய்திகள்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 120 பேருக்கு தீவிர சிகிச்சை

Published On 2018-10-25 10:59 GMT   |   Update On 2018-10-25 10:59 GMT
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 120 நோயாளிகளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மதுரை:

மதுரை மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர்.

அவர்கள் எந்த வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று டாக்டர்கள் பரிசோதனை செய்கின்றனர். அப்போது 120 பேருக்கு வைரஸ் காய்ச்சலும், 5 பேருக்கு பன்றிக் காய்ச்சலும், 8 பேருக்கு டெங்கு காய்ச்சலும் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து வைரஸ், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் உள்ள நோயாளிகளுக்கு தனித்தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த மீனாட்சி (வயது 49), வீரம்மாள் (70) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த கிருஷ்ணம்மாள் (58) நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 120 நோயாளிகளுக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கலெக்டர் நடராஜன் ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு செய்தார். உரிய சிகிச்சை அளிக்க டாக்டர்களிடம் அறிவுறுத்தினார்.

மருத்துவ பணிகள் சுகாதார இயக்குநர் உத்தரவின் பேரில் மருத்துவ ஊழியர்கள் மாவட்ட அளவில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News