செய்திகள்

புதுக்கோட்டையில் புற்றுநோய் ஆரம்ப நிலை கண்டறியும் பரிசோதனை முகாம்

Published On 2018-10-13 14:40 GMT   |   Update On 2018-10-13 14:40 GMT
புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அடையார் புற்றுநோய் மையம் இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ஆரம்ப நிலை கண்டறியும் பரிசோதனை முகாம் கல்லூரி முதல்வர் ராமர் தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அடையார் புற்றுநோய் மையம் இணைந்து நிலைய வளாகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ஆரம்ப நிலை கண்டறியும் பரிசோதனை முகாம் கல்லூரி முதல்வர் ராமர் தலைமையில் நடைபெற்றது.
முகாமில் அடையார் புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் ஆறுமுகக்குமரன் கலந்து கொண்டு விழிப்புணர்வு கையேடு வழங்கி கூறுகையில், இந்தியாவில் ஆண்டிற்கு சுமார் 10 லட்சம் பேர் புகையிலையினால் ஏற்படும் நோய்களுக்கு பலியாகின்றனர்.

புகையிலை பயன்பாட்டில் ஆண்கள் 43, பெண்கள் 16 சதவிகிதம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். தினமும் சுமார் 2500 பேர் புகையிலை சம்பந்தப்பட்ட நோயினால் உயிரிழக்கின்றனர்.  இளையோர்களான நீங்கள் முதலில் புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்களை உபயோகப்படுத்தமாட்டோம் என்பதில்  உறுதியாக இருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.  

சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச் சங்கத்தலைவர் மாருதி.க.மோகன்ராஜ் கலந்து கொண்டு பேசும் போது, புகைப்பழக்கம் புகை பிடிப்பவரை மட்டுமல்லாது அவர் உடனிருப்பவரையும் பாதிக்கிறது. புகைப்பிடிப்பதால் புற்றுநோய்  மட்டுமல்லாமல், இருதய நோய், நரம்பு தளர்ச்சி, சுவாசம்  சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம்.  
மேலும் ரத்தக்குழாய் அடைப்பால் கை, கால், இழப்பு மற்றும் ஆண்மை குறைபாடு ஏற்படலாம். எனவே புகையிலை, பாக்கு  போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் உபயோகத்தை  இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என்றார். முகாமில் பயிற்சி அலுவலர்கள் ராஜேந்திரன், சுந்தரகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜோதிமணி  வரவேற்றார். முடிவில் அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார். முகாமில் சுமார் 300 பேர் கலந்து கொண்டு பயன்  பெற்றனர். #tamilnews
Tags:    

Similar News