செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்

Published On 2018-10-10 14:50 GMT   |   Update On 2018-10-10 14:50 GMT
மினரல் வாட்டர் கம்பெனியை மூடவேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் தங்களது குழுந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தொட்டியபட்டி கிராமத்தில் தனியார் மினரல் வாட்டர் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும், மேலும் இங்கிருந்து வெளியேற்றப்படும் நீரால் சுகாதாரகேடு ஏற்பட்டு நோய்பரவுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும் மினரல் வாட்டர் கம்பெனியை மூடக்கோரி போராட்டம் நடத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதையடுத்து சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் சில மாதங்களுக்கு முன்பு மினரல் வாட்டர் கம்பெனி மூடப்பட்டது.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மினரல் வாட்டர் கம்பெனி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த கோர்ட்டு கம்பெனியை மூட இடைக்கால தடைவிதித்தது. இதனை தொடர்ந்து மீண்டும் மினரல் வாட்டர் கம்பெனி திறக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த தொட்டியபட்டி கிராம மக்கள் மினரல் வாட்டர் கம்பெனியை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் ஆலையை மூடும்வரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தொட்டியபட்டி பகுதியில் ஏராளமான மாணவ- மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது. #tamilnews
Tags:    

Similar News