வெங்கல் அருகே செல்போன் டவரில் பேட்டரி திருட்டு - 5 பேர் கைது
பெரியபாளையம்:
வெங்கல் அருகே உள்ள கரிகலவாக்கம் கிராமத்தில் தனியார் செல்போன் டவர் உள்ளது. இதில் இருந்த சுமார் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 10 பேட்டரிகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதுகுறித்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தார்.
இந்த நிலையில் செல்போன் டவரில் பேட்டரிகளை திருடியது அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த கிருஷ்ணராஜ், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலணி கமலா நகரை சேர்ந்த மணிகண்டன், புதுக்கோட்டை மாவட்டம் கொரும்பட்டி கிராமம் நல்லுசாமி, அரும்பாக்கம், என்.ஜி.ஓ. காலனி ஷேக்தா வூத், அசோக்நகர் 11-வது தெருவை சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோர் என்பது தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி பேட்டரிகளை கைப்பற்றினர். மேலும் திருட்டுக்கு பயன் படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான 5 பேரும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.