செய்திகள்

நாமக்கல்லில் அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

Published On 2018-09-25 15:40 GMT   |   Update On 2018-09-25 15:40 GMT
அகில இந்திய அஞ்சல் ஊழியர் கூட்டு குழு சார்பில், நாமக்கல் தலைமை அஞ்சலக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்:

அகில இந்திய அஞ்சல் ஊழியர் கூட்டு குழு சார்பில், நாமக்கல் தலைமை அஞ்சலக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கோட்ட செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ், ஈஸ்வரன் தலைமை வகித்தனர். போராட்டத்தில் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு ஜி.டி.எஸ் கமிட்டியின் பரிந்துரைகளை அமல் படுத்த வேண்டும். தற்போதைய வழங்கப்பட்ட நிலுவை தொகைக்கான கணக்கீட்டுமுறை மாற்றப்பட வேண்டும். பணிக்கொடையை உயர்த்தி வழங்க வேண்டும். ஜி.டி.எஸ் குரூப் காப்பீட்டு தொகையை உயர்த்த வேண்டும். ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் . 12, 24, 36 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வுகள், பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கிளைச் செயலாளர்கள் ராமச்சந்திரன், சம்பத்குமார், சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். # tamilnews

Tags:    

Similar News