செய்திகள்

உசிலம்பட்டியில் ஆசிரியர் வீட்டுக்குள் புகுந்து 12 பவுன் நகை கொள்ளை

Published On 2018-09-12 15:09 IST   |   Update On 2018-09-12 15:09:00 IST
உசிலம்பட்டியில் ஆசிரியர் வீட்டுக்குள் புகுந்து 12 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை சாலையில் உள்ள சில்லாம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி (வயது 72). ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சஞ்சீவி (70). இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.

இன்று அதிகாலை கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து நைசாக உள்ளே புகுந்தனர். வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த சஞ்சீவி கழுத்தில் கிடந்த 12 பவுன் நகையை கொள்ளையர்கள் பறித்தனர்.

உடனே திடுக்கிட்டு எழுந்த சஞ்சீவி கூச்ச லிட முயன்றார். ஆனால் உஷாரான கொள்ளையர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து உசிலம்பட்டி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார். #tamilnews
Tags:    

Similar News