செய்திகள்

பள்ளிக்கரணையில் டிரைவரை தாக்கி கார் கடத்தல்

Published On 2018-09-05 14:37 IST   |   Update On 2018-09-05 14:37:00 IST
பள்ளிக்கரணையில் டிரைவரை தாக்கி கார் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேளச்சேரி:

சென்னை பள்ளிகரணை ராம்நகர் சிக்னல் அருகே கால்டாக்சி டிரைவர் ஒருவரை வடமாநில வாலிபர் தாக்கி அவரது காரை கடத்தி சென்றார்.

காரை கடத்தியவர் பள்ளிக்கரணையில் இருந்து தாம்பரம் வரை சென்ற போது பல இடங்களில் விபத்து ஏற்படுத்தி விட்டு சென்றார்.

தாம்பரத்தில் அவரை போக்குவரத்து போலீசார் பிடிக்க முயன்ற போது காரை நிறுத்தாமல் சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற பொதுமக்கள் பெருங்களத்தூர் அருகே மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணை யில் அவனது பெயர் அனுஸ்மான் லியோனல் சிங் (29) என்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனை போலீசார் கைது செய்து கடத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.

பொதுமக்கள் தாக்கியதில் அவன் காயம் அடைந்ததால் குரோம்பேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.

Tags:    

Similar News