செய்திகள்

மாணவி விவகாரத்தில் தமிழிசை பக்குவமாக நடந்து இருக்க வேண்டும்- ஜி. ராமகிருஷ்ணன்

Published On 2018-09-04 07:46 GMT   |   Update On 2018-09-04 07:46 GMT
தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பக்குவமாக நடந்து இருக்க வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார். #Sophia #TamilisaiSoundararajan
கோவை:

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கோவையில் உள்ள மாவட்ட கட்சி அலுலவகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் உரிமையை சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கியதை கண்டித்து வருகிற 18-ந் தேதி சி.ஐ.டி.யூ., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்து இந்திய மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கர், விவசாய தொழிலாளர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டல அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளது.

இதனை மார்க்சிஸ்டு ஆதரிக்கிறது. கோவை மக்களின் வாழ்வாதார பிரச்சனையை மையமாக வைத்து நடைபெறும் இந்த போராட்டத்தை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக என்.டி.சி. மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.


தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி சோபிகா தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பிய விவகாரத் தில் பழி வாங்கும் நோக்கில் மாணவிக்கு தீவிரவாதிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக தமிழிசை புகார் அளித்துள்ளார். இது தமிழிசைக்கு அழகல்ல. அவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் மாணவி மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது போல் தமிழிசை மீது மாணவி தந்தை கொடுத்த புகார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Sophia  #TamilisaiSoundararajan
Tags:    

Similar News