செய்திகள்
பெரியார் சிலைக்கு முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மாலை அணிவித்த காட்சி.

அதிமுக ஆட்சியை ஒழிக்க முக ஸ்டாலினால் மட்டுமே முடியும்- முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பேட்டி

Published On 2018-09-03 10:21 GMT   |   Update On 2018-09-03 10:21 GMT
அ.தி.மு.க. ஆட்சியை ஒழிக்க மு.க. ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்று முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் தெரிவித்துள்ளார். #ADMK #MKStalin #Mullaivendhan
தருமபுரி:

தி.மு.க.வில் மீண்டும் இணைந்த முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் இன்று தருமபுரிக்கு வந்தார். அவருக்கு மதிகோண்பாளையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் தருமபுரி 4 ரோட்டில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தார். காமராஜர், அம்பேத்கார், பெரியார் சிலைகளுக்கும் மாலை அணிவித்தார்.

அதன்பிறகு அவர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்துக்கு வந்தார். அங்கும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

என்னை மீண்டும் தி.மு.க.வில் இணைத்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கலைஞர் உயிரோடு இருந்தபோது அண்ணா அறிவாலயத்தில் எப்படி என்னை வரவேற்றாரோ அதேபோல மு.க. ஸ்டாலினும் என்னை அன்புடன் வரவேற்றார்.

நான் மரணம் அடைந்தால் என் உடல் மீது இருவர்ண கொடியை போர்த்தும் வாய்ப்பை வழங்கி உள்ளனர். மத்தியில் உள்ள மதவாத ஆட்சியையும், தமிழ்நாட்டில் உள்ள ஊழல் ஆட்சியையும் ஒழிக்க வேண்டும். இதை ஒழிக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.


தருமபுரி மாவட்டம் மீண்டும் தி.மு.க. கோட்டை என்பதை நிரூபிப்போம். அதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். என்னை மீண்டும் கட்சியில் இணைக்க உதவிய நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தருமபுரி மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் தர்மசெல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.  #ADMK #MKStalin #Mullaivendhan
Tags:    

Similar News