இந்தியா

தமிழக மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில் மகிழ்ச்சி- பிரதமர் மோடி

Published On 2026-01-14 11:12 IST   |   Update On 2026-01-14 11:28:00 IST
  • பொங்கல் உலகளாவிய அளவில் சர்வதேச பொங்கலாக மாறி உள்ளது.
  • விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

புதுடெல்லி:

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதில் பிரதமர் மோடி மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இதுபோல இந்த ஆண்டும் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பொங்கல் விழா இன்று காலை தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் பொங்கலிடப்பட்டது.

இந்த விழாவில் நீதிபதிகள், பல உயரதிகாரிகள், பல்வேறு துறை வல்லுனர்கள், திரை பிரபலங்கள், பத்திரிகைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்றனர். தோழி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டார். நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். வணக்கம். பொங்கல் நல்வாழ்த்துகள் என கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

* பொங்கல் உலகளாவிய அளவில் சர்வதேச பொங்கலாக மாறி உள்ளது.

* தமிழக மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில் மகிழ்ச்சி.

* விவசாயிகளுடனான உறவை பிரதிபலிக்கும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை உள்ளது.

* கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பொங்கல் கொண்டாடப்பட்டது.

* விவசாயத்தை போற்றும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை உள்ளது.

* விவசாயிகளுக்கும் தமிழர்களுக்கும் இருந்த தொடர்பை பற்றி பேசுகிறது திருக்குறள்.

* விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

* விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

* சுற்றுச்சூழலை பாதுகாப்பதே எங்களின் முதல் நோக்கமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News