செய்திகள்

முக ஸ்டாலினை சந்திக்க மாட்டேன்- முக அழகிரி

Published On 2018-09-03 07:54 GMT   |   Update On 2018-09-03 07:54 GMT
தி.மு.க.வின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு மு.க.அழகிரி பதில் அளித்துள்ளார். #DMK #MKStalin #MKAzhagiri
ஆலந்தூர்:

கருணாநிதியின் 30-வது நினைவு நாளையொட்டி, சென்னையில் வருகிற 5-ந்தேதி அமைதி பேரணி நடத்தப் போவதாக மு.க. அழகிரி அறிவித்துள்ளார்.

அமைதி பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் மு.க.அழகிரி இன்று மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார்.

விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கே:- தி.மு.க.வின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுள்ளார். அவரை சந்திப்பீர்களா?

ப:- சந்திக்க மாட்டேன்

கே:- சென்னையில் நீங்கள் நடத்த இருக்கும் அமைதி பேரணியில் எவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள்?

ப:- ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள்.


கே:- தி.மு.க.வில் சேர்த்துக்கொண்டால் மு.க.ஸ்டாலினை தி.மு.க. தலைவராக ஏற்க தயார் என்று கூறி இருந்தீர்கள். அதற்கான அறிகுறிகள் இதுவரை தெரியவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ப:- 5-ந்தேதி பத்திரிகையாளர்களை சந்தித்து அப்போது முடிவை தெரிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மு.க.அழகிரியின் பேரணிக்கு சென்னை போலீஸ் கமி‌ஷனரிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பரிசீலித்து அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி போலீஸ் அதிகாரி கூறுகையில், மு.க.அழகிரியின் பேரணிக்கு எழுத்துபூர்வமாக அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பேரணி செல்லக்கூடிய சாலையில் வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லை. அதனால் பேரணிக்கு உறுதியாக அனுமதி கிடைக்கும் என்றார். #DMK #MKStalin #MKAzhagiri
Tags:    

Similar News