செய்திகள்

பைக்குகளில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் - தமிழக அரசு மீண்டும் எச்சரிக்கை

Published On 2018-08-27 13:55 GMT   |   Update On 2018-08-27 13:55 GMT
மோட்டார் பைக்கில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. #TNPolice #Helmet
சென்னை:

மோட்டார் வாகன சட்டப்படி நான்கு சக்கர  வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விதி உள்ளது. இந்த விதியை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இந்த விதியை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, ‘இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக பத்திரிகை, தொலைக்காட்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதுதொடர்பான மோட்டார் வாகன சட்ட விதிகள் முறையாக அமல்படுத்தப்படும்’ என்று தமிழக அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து, தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்பவர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
Tags:    

Similar News