செய்திகள்

மயிலாடுதுறை அருகே நிதி நிறுவன அதிபர் தற்கொலை- தூக்கில் பிணமாக தொங்கினார்

Published On 2018-08-27 09:47 GMT   |   Update On 2018-08-27 09:47 GMT
மயிலாடுதுறை அருகே நிதி நிறுவன அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை:

ராஜஸ்தான் மாநிலம் பில்வாடா மாவட்டத்தை சேர்ந்தவர் பர்வந்த் (வயது 35). இவரது மனைவி ரிங்கு (30).

இந்த நிலையில் பர்வந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் இருந்து நாகை மாவட்டம் பூம்புகார் தர்மகுளத்துக்கு வந்தார். பின்னர் அங்கு நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் பர்வந்த் வீட்டில் இருந்தார். அப்போது அவரது மனைவி ரிங்கு வெளியே புறப்பட்டு சென்றார்.

இதையடுத்து இரவில் மனைவி ரிங்கு வீட்டுக்கு திரும்பினார். வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் பார்த்த போது அங்கு பர்வந்த் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு திடுக்கிட்டார். கணவரின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார். இதைதொடர்ந்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பர்வந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நிதி நிறுவன அதிபர் பர்வந்த் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். தொழிலில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது அவரிடம் பணத்தை பெற்றவர்கள் ஏமாற்றியதால் இந்த முடிவை எடுத்தாரா? குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News