செய்திகள்

தி.மு.க. தலைவர் தேர்தலை அவசர அவசரமாக நடத்தவில்லை - மு.க.அழகிரி புகாருக்கு ஜெ.அன்பழகன் பதில்

Published On 2018-08-26 14:29 IST   |   Update On 2018-08-26 14:29:00 IST
தி.மு.க. தலைவர் தேர்தலை அவசர அவசரமாக நடத்தவில்லை என்று மு.க.அழகிரி புகாருக்கு ஜெ.அன்பழகன் பதில் அளித்துள்ளார். #DMK #Karunanidhi #MKStalin

சென்னை:

தி.மு.க.தலைவர் பதவிக்கு அவசர அவசரமாக தேர்தல் நடைபெறுவதாக மு.க.அழகிரி குற்றம் சாட்டி இருந்தார்.

இதுபற்றி சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகனிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.

தி.மு.க. தலைவர் தேர்தலில் அவசரம் எதுவும் கிடையாது. எங்கள் கட்சியை பொறுத்தவரை தேர்தலை முறைப்படி நடத்துகிறார்கள்.


கட்சியில் எங்கள் தலைவர் மறைவையொட்டி ஆகஸ்டு மாதத்தில் அந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரிசொல்லி இருக்கிற காரணத்தினால் பொதுக்குழுவை கூட்ட வேண்டி உள்ளது. ஆகவே அந்த பொதுக்குழுவை கூட்டி தேர்தலை முறைப்படி நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News