செய்திகள்

மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில், அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-08-25 16:18 GMT   |   Update On 2018-08-25 16:18 GMT
மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில், அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் அரசு டாக்டர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் அனைத்து பயணப்படிகளும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு டாக்டர்கள் சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை பேட்ஜ் அணிவது, தர்ணா உள்பட தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அரசின் கவன ஈர்ப்பு பேரணி நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து கவன ஈர்ப்பு பேரணி புறப் பட்டது. பேரணிக்கு அரசு டாக்டர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லெனின் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ், பொருளாளர் சிவ பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவக்கல்லூரியில் இருந்து பேரணி புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தடைந்தனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர். 
Tags:    

Similar News