செய்திகள்

என் வீடு அருகே நடந்த குண்டு வெடிப்பு பற்றி விசாரிக்க வேண்டும்- டிடிவி தினகரன்

Published On 2018-07-31 13:17 IST   |   Update On 2018-07-31 13:17:00 IST
தன் வீடு அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பு பற்றி காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran
சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டி.டி.வி.தினகரன் இன்று அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்டு தலைவர் தா.பாண்டியனை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

பின்னர் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தா.பாண்டியன் உடல் நிலை நல்ல நிலையில் முன்னேறி வருகிறது. தேறி வருகிறார். விரைவில் வீடு திரும்ப இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

என் வீடு அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பு பற்றி காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். எனக்கு தனிப்பட்ட விரோதிகள் யாரும் இல்லை. அரசியல் காரணமாக யாராவது விரோதிகள் இந்த சம்பவத்தை தூண்டி விட்டிருக்கலாம்.


கட்சியில் உள்ளவர்கள் கூறி தான் பரிமளம் கட்சியில் இணைக்கப்பட்டார். அவர் கடுமையாக நடந்து கொண்டதாக வந்த புகார் அடிப்படையில் தான் நீக்கப்பட்டார்.

காரில் உருவபொம்மை இல்லை. வைக்கோல் பரப்பி அதன் கீழ் ஏதோ வைத்திருந்திருக்கிறார். அதை அவர் பற்ற வைத்த பின் தான் அது எறிந்துள்ளது. இது எதாவது அரசியல் உள்நோக்கத்தோடு நடந்திருக்கலாம்.

வெடி விபத்து நிகழ்ச்சிக்கு பின் நிர்வாகிகள் எனக்கு பாதுகாப்பு கேட்கலாம் என்று கூறினார்கள். நான் தனி பாதுகாப்பு வைத்து கொள்ளலாம் என்றே கூறினேன்.

இது போன்ற நாடகத்தை அரங்கேற்றி பாதுகாப்பு கேட்க அவசியமில்லை. அத்தகைய அரசியல் கட்சித் தலைவர் நான் அல்ல.

இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDhinakaran
Tags:    

Similar News