செய்திகள்

கருணாநிதி உடல்நலம் தேறியது மகிழ்ச்சி - இல.கணேசன்

Published On 2018-07-29 12:05 IST   |   Update On 2018-07-29 12:05:00 IST
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். #Karunanidhi #KarunanidhiHealth
சென்னை:

பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தார். மு.க.ஸ்டாலின் மற்றும் அங்கிருந்த டாக்டர்களிடம் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்தார்.

பின்னர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கட்சி வேறுபாடற்று அரசியல் களத்தில் இருக்கக் கூடிய அத்தனை பேருக்கும் ஒரு மூத்த தலைவராக விளங்குபவர் கலைஞர். அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும்.

அவருக்கு உடல் நலம் குன்றியபோது கனிமொழியை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது கலைஞருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவது உண்மை. ஆனால் ஆபத்தான நிலையில் இல்லை என்று தெரிவித்தார்.

எனவே எனது சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு இன்று காலையில் தான் வந்தேன். உடனே காவேரி மருத்துவமனைக்கு சென்று மு.க.ஸ்டாலின் மற்றும் டாக்டரிடம் கலைஞரின் உடல்நலம் பற்றி கேட்டறிந்தேன். அப்போது கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் அருகில் இருந்தனர்.

கலைஞரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இல்லை என்றும், உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தெரிவித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #Karunanidhi #KarunanidhiHealth
Tags:    

Similar News