செய்திகள்

திமுக தலைவர் நலமுடன் இருக்கிறார் - மு.க அழகிரி

Published On 2018-07-28 22:04 IST   |   Update On 2018-07-28 22:04:00 IST
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி நலமுடன் இருப்பதாக மு.க அழகிரி தெரிவித்துள்ளார். #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi #MKAlagiri
சென்னை:

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி நாட்டில் தி.மு.க தொண்டர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

நேற்று இரவு திடீரென ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து பரவிவரும் வதந்திகளால் தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்திலும், கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையிலும் குவிந்துள்ளனர்.

இதையடுத்து, மாலை 8 மணியளவில் அழகிரி, உதயநிதி ஸ்டாலின் உட்பட கருணாநிதியின் குடும்பத்தினர் காவிரி மருத்துவமனைக்கு சென்றனர்.



இந்நிலையில், தற்போது மருத்துவமனையில் இருந்து கிளம்பிய அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கருணாநிதி நன்றாக இருப்பதாகவும், உடல்நலம் தேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சற்றுமுன்னர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையை அடுத்து, தற்போது மு.க அழகிரியின் இந்த கருத்து தொண்டர்களிடையே உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi #MKAlagiri
Tags:    

Similar News