செய்திகள்

சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டும்- மோகன் குமாரமங்கலம் வலியுறுத்தல்

Published On 2018-07-27 18:52 IST   |   Update On 2018-07-27 18:52:00 IST
சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு தொழில் வல்லுநர் காங்கிரஸ் பிரிவு மாநில தலைவர் மோகன் குமாரமங்கலம் வலியுறுத்தியுள்ளார்.

சேலம்:

தமிழ்நாடு தொழில் வல்லுநர் காங்கிரஸ் பிரிவு மாநில தலைவர் மோகன் குமாரமங்கலம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் சொத்துவரி 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்துவது என அரசு அறிவித்து இருப்பது மக்களை இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த வரியை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தான் அறிவிக்க வேண்டும். இதை அரசு அறிவிக்க முடியாது. வரிவிதிப்பை அமல்படுத்துவதற்கு முதலில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அரசின் இந்த செயல் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உணர்கிறேன். இதனால் ரூ.3500 கோடி மத்திய அரசிடம் இருந்து தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்கவில்லை. இந்த நிதியை வழங்க மறுத்து விட்டனர். இந்த சூழலில் மக்கள் மீது மேலும் வரியை சுமத்துவது கண்டனத்துக்குரியது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பஸ் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவை மக்களுக்கு சுமை மேல் சுமையாக உள்ளது. இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News