செய்திகள்

சொத்து வரி உயர்வு- த.மா.கா. போராட்ட அறிவிப்பு

Published On 2018-07-25 16:26 IST   |   Update On 2018-07-25 16:26:00 IST
சொத்து வரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #TamilMaanilaCongress
கோவை:

த.மா.கா கட்சியின் ஒருங்கிணைந்த கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் சார்பில் கோவை மாநகர் சிங்காநல்லூர் தியாகி என்.ஜி.ஆர். திடலில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 19-ந் தேதி மூப்பனார் பிறந்த தின பொதுக்கூட்டம், விவசாயிகள் தினமாக நடத்தப்படுகிறது. த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்குகிறார்.

இப்பொதுக்கூட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை மாநகர் வடக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் கவுண்டம்பாளையம் ராமசாமி மண்டபத்தில் நடந்தது. மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவை தங்கம் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், தமிழக மக்கள் மீது சொத்து வரி 100 சதவீதம் திணிக்கப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லையேல், த.மா.கா.சார்பில் மக்களை திரட்டி தமிழக அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார். கூட்டத்தில் மாநகர் தெற்கு மாவட்ட தலைவர் வி.வி.வாசன், மாநில துணை தலைவர் குனியமுத்தூர் ஆறுமுகம், மாநில செயலாளர்கள் பொன்.ஆனந்தகுமார், ராஜ்குமார், செல்வராஜ், மாநில இளைஞர் அணி துணை தலைவர் அருண்பிரகாஷ், மாநில தொழிற்சங்க செயலாளர் துரைசாமி, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தொழிற்சங்க தலைவர் ராஜன், மாவட்ட நிர்வாகிகள் சி.ஆர்.ரவிச்சந்திரன், கோவை விஷ்ணு, மதிபாலா குமார், சுகுமார், கண்ணன், உதயகுமார், மன்னன் முருகேசன், செந்தில், சரத் விக்னேஷ், லோகநாதன், குனிசை ரவிச்சந்திரன், முரளி, சதீஷ்வரன், மோகன்ராஜ், மோகமத் நவாப், கார்த்திக், ஜனா, லோகநாதன், சங்கர், சர்தார் இப்ராகீம், ரபீக், மாயாண்டி, பழனிசாமி, வீரபத்திரன், கார்த்திக், சாந்தி, லட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர். #TamilMaanilaCongress
Tags:    

Similar News