செய்திகள்

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் வருகிறது ஆங்கில வழி கல்வி - அரசாணை வெளியீடு

Published On 2018-07-25 10:34 GMT   |   Update On 2018-07-25 10:34 GMT
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. #TNGovt
சென்னை:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி தொடங்க அனுமதி அளிக்க கோரிக்கை விடப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஏற்கெனவே அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஆங்கில வழி கல்விக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு அதிக அளவில் இருந்து வருகிறது. அதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. எனவே அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வியை விரிவுபடுத்தப்பட உள்ளதாக அரசாணை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆங்கில வழி பிரிவுகளில் பயிலும் மாணவர்களிடம் எத்தகைய கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஆங்கில வழியில் பாடத்தை நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர வசதிகள் போதுமான அளவில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆங்கில வழி கல்வி கோரும் பள்ளிகளில் 50 சதவீத பிரிவுகள் கட்டாயமாக தமிழ் வழி பிரிவுகளாக இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News