செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் சந்திக்க மறுத்தது ஏற்புடையதல்ல- கிருஷ்ணசாமி

Published On 2018-07-25 04:47 GMT   |   Update On 2018-07-25 04:47 GMT
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க முடியவில்லை அல்லது சந்திக்க மறுத்தது ஏற்புடையதல்ல என்று கிருஷ்ணசாமி கூறினார். #Krishnasamy #OPS
கோவில்பட்டி:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட புதிய தமிழகம் இளைஞரணி பொறுப்பாளர் ராஜசேகர் விபத்தில் காயமடைந்து கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விளாத்திகுளம், ஓட்டப்பிடாரத்தில் ஏழைகளுக்கு ஒதுக்கிய நிலங்களை முறைகேடாக விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க முடியவில்லை அல்லது சந்திக்க மறுத்தது வருந்தத்தக்க வி‌ஷயம். அதுவும் அனுமதி அளித்து விட்டு பார்க்க மறுத்திருந்தால் ஏற்கத்தல்ல. தமிழக மக்களின் பிரநிதிகளை மத்திய அரசின் அமைச்சர்கள் அப்படி செய்திருக்கக்கூடாது. செய்திருந்தால் ஏற்புடையதல்ல.


தமிழகத்தில் கல்வித் தரம் மிகவும் தாழ்ந்து போய்விட்டது. வரக்கூடிய தலைமுறையை உருவாக்கக் கூடிய பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது. எனவே தரம் மட்டுமல்ல. தியாக உணர்வோடு இருக்க கூடியவர்களும், அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களும் தான் ஆசிரியர் பணிக்கு தேவை. தமிழக அரசின் சொத்து வரி உயர்வு தவறு. இது சரியான நடவடிக்கை அல்ல. இதனை திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #Krishnasamy #OPS
Tags:    

Similar News