செய்திகள்

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸ் ரத்து - ஐகோர்ட் உத்தரவு

Published On 2018-07-23 11:42 GMT   |   Update On 2018-07-23 11:42 GMT
கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிபிஐ பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #KartiChidambaram
சென்னை:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு மற்றும் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் தொடர்புடைய கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதை தடுக்கும் விதமாக கடந்தாண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி, அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி அவரது தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது.

இதற்கிடையே, கோர்ட் அனுமதியுடன் அவர் சில முறை வெளிநாட்டுக்கு சென்று வந்தார். இந்நிலையில், அவரது மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், சிபிஐ பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டனர். எனினும், இந்த வழக்கில் மற்ற விசாரணைக்கு இந்த தீர்ப்பு தடையாக இருக்காது எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
Tags:    

Similar News