செய்திகள்

படிப்பிலும், விளையாட்டிலும் மாணவர்கள் அக்கறை செலுத்த வேண்டும்: கவர்னர் அறிவுரை

Published On 2018-07-21 22:54 IST   |   Update On 2018-07-21 22:54:00 IST
படிப்பிலும், விளையாட்டிலும் மாணவர்கள் அக்கறை செலுத்தினால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று கவர்னர் கிரண்பேடி அறிவுரை கூறியுள்ளார்.

சேதராப்பட்டு:

புதுவை ஆலங்குப்பத்தில் கால்பந்து விளையாட்டில் மாணவர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் தினமும் அங்குள்ள அரசு பள்ளி மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இன்று காலை 7 மணிக்கு கவர்னர் கிரண்பேடி ஆலங்குப்பத்துக்கு சென்றார்.

அங்கு கால்பந்து வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ரோட்டரி சங்கம் வழங்கிய கால்பந்து விளையாட்டு உபகரணங்களை கவர்னர் கிரண்பேடி வீரர்களுக்கு வழங்கினார்.

மேலும் வீரர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடிய கவர்னர் கிரண்பேடி அவர்களுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டார்.

பின்னர் விளையாட்டு வீரர்கள் மத்தியில் கிரண்பேடி பேசியதாவது:-

படிப்பிலும், விளையாட்டிலும் மாணவர்கள் அக்கறை செலுத்த வேண்டும், இதன் மூலம் வாழ்க்கையில் முன்னேறலாம். இன்று அரசியல்வாதிகள், அரசு பதவிகளில் உள்ளவர்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு அவர்கள் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ந் தேதி விவேகானந்தர் பிறந்த நாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடி வருகிறோம். வருகிற ஜனவரி 12-ந் தேதி விவேகானந்தர் பிறந்த நாளை கால்பந்து தினமாக கடைபிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

எனவே, நகரம் மற்றும் கிராமங்களில் மாணவர்கள் கால்பந்து ஆர்வத்துடன் விளையாட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது கவர்னருடன் வந்த கலெக்டர் அபித்ஜித் சிங், படிக்கும் போது விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும். அப்போது தான் தேர்வில் குறைந்தமதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்தாலும் தோல்வியை சகஜமாக எடுத்து கொள்ள முடியும் என்றார்.

Tags:    

Similar News