செய்திகள்

நாட்டின் நலன் கருதியே முடிவெடுக்கப்பட்டுள்ளது: செல்லூர் ராஜூ பேட்டி

Published On 2018-07-21 10:08 GMT   |   Update On 2018-07-21 10:08 GMT
பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாட்டின் நலன் கருதியே முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை:

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் காவிரி பிரதான குடிநீர்குழாய் சேதமடைந்து சரிசெய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதனை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று பார்வையிட்டார் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக அமித்ஷா கேட்டு கொண்டதற்கு இணங்க தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து ஆலோசித்து கூறியதன் படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். நாட்டின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திமு.க.வை பொறுத்த வரை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது வேடிக்கையாக உள்ளது.

ஊழல்குற்றச்சாட்டு குறித்த அமித்ஷாவின் கருத்து பொதுவானது அ.தி.மு.க. தான் என்று குறிப்பிட்டு கூறவில்லை.

ஊழல் இதற்கு முன்பு எல்லா காலங்களிலும் நடந்துள்ளது. இன்று ஊடகங்கள் , வலை தளங்கள் அதிகமாக இருப்பதால் அதிகமாக பேசப்படுகிறது,

ராகுல் இந்தியாவில் வளர்ந்து வரக்கூடிய ஒரு இளம் தலைவர். அவரது தந்தையை போல மிக எளிமையாக பழகுவார். சென்னையில் ராகுல், ஜெயலலிதாவை சந்தித்த போது நான் அவரிடம் பேசி இருக்கிறேன். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மீதான நாடாளுமன்ற கூட்ட விவாதத்தின் போது ராகுல் நடந்து கொண்ட விதம் அரசியல் நாகரீகமானது.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News