செய்திகள்

18 வயது பூர்த்தியடைந்ததுடன் காதலனுடன் சென்ற மாணவி - கவுன்சிலிங் வழங்க மாஜிஸ்திரேட்டு உத்தரவு

Published On 2018-07-05 11:46 GMT   |   Update On 2018-07-05 11:46 GMT
முதுகுளத்தூரில் கல்லூரி மாணவி ஒருவர் 18 வயது பூர்த்தியடைந்த உடனே காதலனுடன் சென்ற நிலையில் மாணவிக்கு ‘கவுன்சிலிங்’ வழங்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
முதுகுளத்தூர்:

முதுகுளத்தூரை சேர்ந்த கண்ணன் மகள் தீபிகா (வயது18). இவர் கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரும், கமுதி அருகே சீமனேந்தலை சேர்ந்தவரும், தற்போது பாம்பனில் வசித்து வரும் ராமன் மகன் வெற்றிவேலும் (21) கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

கடந்த மாதம் 18 வயது தீபிகாவிற்கு பூர்த்தியடைந்ததையடுத்து, ஜூலை முதல் தேதியில் தீபிகா முதுகுளத்தூரில் தனது வீட்டிலிருந்து இரவு வெளியேறி, காதலன் வெற்றிவேல் வீட்டில் தஞ்சமடைந்தார்.

இதுகுறித்து தீபிகாவின் தாய் அமுதா தனது மகளை காணவில்லை என முதுகுளத்தூர் போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து முதுகுளத்தூர் போலீசார் காதல் ஜோடிகள் தீபிகா -வெற்றிவேலை கண்டுபிடித்து, முதுகுளத்தூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கீதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

கல்லூரி மாணவி தீபிகாவிற்கு 18 வயது முடிந்து சில வாரங்களே ஆனநிலையில், அவருக்கு ராமநாதபுரம் சமூக நலத்துறை அதிகாரிகள் ‘கவுன்சிலிங்’ வழங்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

மேலும் இருவரும் மேஜரான நிலையில் இருப்பதால் கவுன்சிலிங் முடிந்தபிறகு இருவரின் விருப்பபடி செல்லவும் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News