செய்திகள்

பழனியில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

Published On 2018-06-13 13:36 IST   |   Update On 2018-06-13 13:36:00 IST
பழனியில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
பழனி:

பழனி பகுதியைச் சேர்ந்தவர் ராணி (வயது 17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பழனி அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி விஜயகுமார் (25). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

ஒரே பகுதி என்பதால் பள்ளி மாணவியுடன் விஜயகுமார் சகஜமாக பேசி பழகி வந்தார். நேற்று மாணவியிடம் நைசாக பேசி வேறு இடத்துக்கு கடத்திச் சென்றார். பின்னர் அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். அதிர்ச்சியடைந்த ராணி சத்தம் போட்டு அங்கிருந்து தப்பி ஓடி வந்து விட்டார்.

இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். பின்னர் இது குறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி மாணவியிடம் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். #Tamilnews
Tags:    

Similar News