செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 12 போலி பாஸ்போர்ட்டு வைத்திருந்த நபர் கைது

Published On 2018-06-08 14:57 IST   |   Update On 2018-06-08 14:57:00 IST
சென்னை விமான நிலையத்தில் 12 போலி பாஸ்போர்ட்டு வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
ஆலந்தூர்:

சென்னையில் இருந்து கத்தாருக்கு இன்று அதிகாலை 3.30 மணியளவில் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற வந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் பாஸ்போர்ட் சோதனை நடத்தினர். அப்போது சென்னையை சேர்ந்த மணிவண்ணன் (53). என்பவர் பாஸ்போர்ட்டை எடுத்த போது அவரது சட்டைப்பையில் இருந்து மேலும் 2 பாஸ்போர்ட்டுகள் கீழே விழுந்தன.

இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனி அறையில் வைத்து சோதனையிட்டனர். அவர் வைத்திருந்த கைப்பையில் மேலும் 10 பாஸ்போர்ட்டுகள் இருந்தன. அவை அனைத்தும் போலி என தெரிய வந்தது. எனவே இவருக்கும் வெளிநாடுகளில் இருக்கும் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதி மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசாரிடம் இவர் ஒப்படைக்கப்பட்டார். #Tamilnews
Tags:    

Similar News