கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு பத்ம விபூஷன் விருது!
- 2006 முதல் 2011 வரை முதலமைச்சராகப் பணியாற்றிய இவர், பல தசாப்தங்களாக பொது வாழ்வில் ஒரு முக்கிய குரலாக இருந்தார்.
- 19 பெண்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு, நாட்டின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது.
கடந்தாண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதியன்று காலமான அச்சுதானந்தன், கேரள அரசியலில் ஒரு உயர்ந்த நபராகவும், இந்தியாவின் மிக மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். 2006 முதல் 2011 வரை முதலமைச்சராகப் பணியாற்றிய இவர், பல தசாப்தங்களாக பொது வாழ்வில் ஒரு முக்கிய குரலாக இருந்தார்.
இதுதவிர கேரளாவைச் சேர்ந்த மேலும் இருவருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷனும், எஸ்என்டிபி யோகம் பொதுச் செயலாளர் வெள்ளப்பள்ளி நடேசனுக்கு பத்ம ஸ்ரீயும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட பட்டியலில், ஐந்து பத்ம விபூஷன் விருதுகள், 13 பத்ம பூஷன் விருதுகள் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் உள்ளன. விருது அறிவிக்கப்பட்டவர்களில் 19 பேர் பெண்கள், ஆறு பேர் வெளிநாட்டினர். பதினாறு விருதுகள் மரணத்திற்குப் பின் அறிவிக்கப்பட்டுள்ளன.