இந்தியா
null

இந்தியாவால் தேடப்படும் 70 குற்றவாளிகள் வெளிநாடுகளில் பதுங்கி உள்ளனர் - மத்திய அரசு

Published On 2026-01-25 14:34 IST   |   Update On 2026-01-25 14:38:00 IST
  • பிற நாடுகளால் தேடப்படும் 203 குற்றவாளிகள் இந்தியாவில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
  • 2024-25 ஆண்டுகளுக்கு இடையில் வெளிநாடுகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தேடப்படும் பட்டியலில் உள்ள 70 இந்தியக் குற்றவாளிகள் 2024-25 ஆண்டுகளுக்கு இடையில் வெளிநாடுகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பல கோடி மோசடி செய்து தப்பிய விஜய் மல்லையா, லலித் மோடி உள்ளிட்டோரும் இதில் அடங்குவர். 

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தேடப்படும் பட்டியலில் இருந்தவர்களில் 27 பேர் கடந்த ஓராண்டில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும் விசாரணைக்கு ஒத்துழைப்புக் கோரியும் இந்தியப் புலனாய்வு அமைப்புகள் வெளிநாட்டு நீதிமன்றங்களுக்கு 74 கடிதங்களை அனுப்பியுள்ளன.

இதில் 54 கடிதங்கள் சிபிஐ சார்பிலும், 20 கடிதங்கள் மாநிலப் புலனாய்வு அமைப்புகள் சார்பிலும் அனுப்பப்பட்டுள்ளன.

அதே வேளையில், பிற நாடுகளால் தேடப்படும் 203 குற்றவாளிகள் இந்தியாவில் இருப்பதாகவும் மத்திய அரசின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.     

Tags:    

Similar News