இந்தியா
இரவோடு இரவாக 40 ஆண்டுகள் பழமையான இரும்பு பாலத்தை திருடிச் சென்ற கும்பல் - சத்தீஸ்கரில் துணிகரம்
- மறுநாள் காலை மக்கள் பார்த்தபோது பாலம் இருந்த இடமே தெரியாமல் மறைந்திருந்தது.
- 2022-ல் பீகாரில் இதே பாணியில் ஒரு பாலம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் மாநிலம் கோர்வா நகரில், சுமார் 40 ஆண்டுகள் பழமையான 10 டன் எடையுள்ள இரும்புப் பாலம் ஒன்றை மர்ம நபர்கள் ஒரே இரவில் துண்டு துண்டாக வெட்டித் திருடிச் சென்றுள்ளனர்.
40 ஆண்டு பழமையான பாலம் ஜனவரி 16 இரவு 11 மணி வரை அங்கு தான் இருந்தது. ஆனால் மறுநாள் காலை மக்கள் பார்த்தபோது பாலம் இருந்த இடமே தெரியாமல் மறைந்திருந்தது.
இதுதொடர்பாக நடந்த விசாரணையில், சுமார் 15 பேர் கொண்ட திருட்டு கும்பல், Gas cutter- உபகரணங்களை பயன்படுத்திப் இரவோடு இரவாக பாலத்தை சிறு துண்டுகளாக வெட்டி, லாரிகளில் ஏற்றிச் சென்றது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தற்போது வரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட பாலின் சில இரும்புத் துண்டுகளையும் போலீசார் ர் மீட்டுள்ளனர்.
முன்னதாக 2022-ல் பீகாரில் இதே பாணியில் ஒரு பாலம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.