இந்தியா
குடியரசு தினம்: நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
- இந்தியாவின் குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது.
- இன்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவின் குடியரசு தினம் நாளை (26-ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த உரை ஆகாசவாணியில் நாடு முழுவதும் மாலை 7 மணி முதல் ஒலிபரப்பப்படும். மேலும் தூர்தர்ஷனின் அனைத்துச் சேனல்களிலும் இந்தியில் ஒளிபரப்பப்பட்டு, தொடர்ந்து ஆங்கில பதிப்பு ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், தூர்தர்ஷனின் பிராந்திய சேனல்களில் பிராந்திய மொழிகளில் ஜனாதிபதியின் உரை ஒளிபரப்பு செய்யப்படும்.