செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் ரெயில் மோதி வாலிபர் பலி

Published On 2018-06-04 12:37 GMT   |   Update On 2018-06-04 12:37 GMT
ரெயில் தண்டவாளத்தில் தலை நசுங்கி உடல் துண்டான நிலையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.

மதுரை:

திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் எதிரே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இதன் அருகில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் துண்டாகி தலை நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜா போலீசில் புகார் செய்தார். ரெயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கறுப்பு-சிவப்பு கட்டம் போட்ட ரெடிமேட் சட்டையும், நீலநிற பேண்ட்டும் அணிந்திருந்தார். இன்று அதிகாலை 2.45 மணியளவில் ரெயிலில் அடிபட்டு அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என்பது தெரியவில்லை.

வாலிபர் இறந்து கிடந்த இடம் அருகே பச்சை நிற சீட் கவர் பொருத்தப்பட்ட சைக்கிள் நீண்ட நேரமாக கேட்பாரற்று இருந்தது. இதில் வாலிபர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது குறித்து மதுரை ரெயில்வே போலீஸ் ஏட்டுகள் வேல்முருகன், சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News