செய்திகள்

போடி அருகே புதுமாப்பிள்ளை திடீர் மாயம்

Published On 2018-05-25 17:23 IST   |   Update On 2018-05-25 17:23:00 IST
போடி அருகே இன்று திருமணம் நடக்க இருந்த புதுமாப்பிள்ளை திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:

போடி அருகே தேவாரம் டி.செல்லாயிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டவர். இவது மகன் இளங்கோவன் (வயது 31). இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் இன்று திருமணம் நடக்க இருந்தது.

இதனால் பத்திரிகை கொடுப்பதற்காக புது மாப்பிள்ளை இயங்கோவன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கிளம்பி சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த ஆண்டவர் உறவினர்களுடன் இளங்கோவனை தேடிப்பார்த்தார்.

மேலும் அக்கம் பக்கம் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தும் காணாததால் தேவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணம் பிடிக்காமல் இளங்கோவன் மாயமானாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி அருகே பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் முத்து சரவணன் (வயது 28). சம்பவத்தன்று பெருமாள் குடும்பத்துடன் வீரபாண்டி கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். அங்கிருந்து முத்துசரவணன் நண்பர்களை பார்ப்பதற்காக கோவிலை விட்டு வெளியே சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவரை காணாததால் பெருமாள் அவரது நண்பர்களிடம் விசாரித்து பார்த்தார்.

அவர்களும் முத்து சரவணனை பார்க்கவில்லை என்று கூறியதால் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முத்து சரவணனை தேடி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News