செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு- தருமபுரி மாவட்டத்தில் 95.71 சதவீதம் தேர்ச்சி

Published On 2018-05-23 10:27 GMT   |   Update On 2018-05-23 10:27 GMT
தமிழகம் முழுவதும் இன்று எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தருமரி மாவட்டம் 95.71 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 16-வது இடத்தை பிடித்துள்ளது.
தருமபுரி:

தமிழகம் முழுவதும் இன்று எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தருமபுரி மாவட்டத்தில் 209 அரசுபள்ளிகள் உள்பட மொத்தம் 308 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் 11 ஆயிரத்து 187 பேரும், மாணவிகள் 10 ஆயிரத்து 545 பேரும் என மொத்தம் 21 ஆயிரத்து 731 பேர் 80 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்.

தருமபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் இன்று காலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி வெளியிட்டார்.

இதில் மாணவர்கள் 10 ஆயிரத்து 652 பேரும், மாணவிகள் 10 ஆயிரத்து 146 பேரும் என மொத்தம் 20 ஆயிரத்து 798 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 209 அரசு பள்ளிகளில் இருந்து 14 ஆயிரத்து 785 பேர் தேர்வு எழுதியதில் 13 ஆயிரத்து 932 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியவர்களில் 95.71 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 94.25 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டைவிட 1.46 சதவீதம் பேர் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் அரசு பள்ளிகளில் தேர்வு எழுதியவர்களில் 94.23 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் கண் தெரியாதவர்கள் 8 மாணவர்கள் எழுதியதில் 7 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். காதுகேளாத, வாய் பேசாத மாணவ, மாணவிகள் 29 பேர் தேர்வு எழுதியதில் 25 பேர் தேர்ச்சி பெற்றனர்.

மாற்றுத்திறனாளிகள் 30 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 26 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுபோன்று கை மற்றும் உடலில் காயம் அடைந்தவர்கள் போன்ற மாணவர்கள் 36 பேர் தேர்வு எழுதியதில் 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தேர்வில் மாவட்டத்தில் 481-க்கு மேல் மதிப்பெண்கள் 393 பேர் பெற்றுள்ளனர். 450-க்கு மேல் மதிப்பெண்கள் 1564 பேர் பெற்றுள்ளனர். 426-க்கு மேல் மதிப்பெண்கள் 1367 பேர் பெற்றுள்ளனர்.

சென்ற ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் 20 இடம் பெற்ற தருமபுரி மாவட்டம் இந்த ஆண்டு 16-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
Tags:    

Similar News